பிராண்டு பெயர்

Bio‑Oil®


தயாரிப்பின் பெயர் மற்றும் அளவுகள்

Dry Skin Gel 50ml
Dry Skin Gel 100ml
Dry Skin Gel 200ml


அறிகுறி

தோல் ஈரப்பதமாக்குதலை கணிசமாக அதிகரிக்கிறது.


தோற்றம்

ஆரஞ்சு / இளஞ்சிவப்பு ஜெல்


உருவாக்கம்

84% திறப்பு அடைக்கக்கூடிய பகுதிப்பொருள்கள், 13% ஈரம் கவர்பொருள்கள் மற்றும் 3% தண்ணீர் கொண்ட ஜெல்.


மூலப்பொருட்கள்

Paraffinum Liquidum, Isopropyl Palmitate, Triisononanoin, Glycerin, Cetearyl Ethylhexanoate, Isopropyl Myristate, Aqua, Caprylic / Capric Triglyceride, Isostearyl Isostearate, C26-28 Alkyl Dimethicone, Butyrospermum Parkii Butter, Sodium Lactate, Urea, Gluconolactone, Sodium PCA, Sodium Hyaluronate, Octyldodecyl PCA, Sucrose Laurate, Sucrose Stearate, Lactic Acid, Lanolin, Butylene Glycol, Dimethicone / Vinyl Dimethicone Crosspolymer, Bisabolol, Helianthus Annuus Seed Oil, Silica, Glycine Soja Oil, Retinyl Palmitate, Tocopheryl Acetate, Niacinamide, Linoleic Acid, Linolenic Acid, Tocopherol, Anthemis Nobilis Flower Oil, Calendula Officinalis Extract, Rosmarinus Officinalis Leaf Oil, Lavandula Angustifolia Oil, Parfum, Farnesol, Limonene, Linalool, CI 17200.


ஒவ்வாப்பொருள்கள்

Bio‑Oil® Dry Skin Gel -இல் மூன்று ஒவ்வாப்பொருள்கள் உள்ளன. பெரும்பாலான ஒவ்வாப்பொருள்களைப் போலவே, இவை தாவர எண்ணெய்களிலும் நறுமணத்திலும் காணப்படுகின்றன. அவையாவன: ஃபார்னெசோல், லிமோனென் மற்றும் லினாலூல்.


பாதுகாப்பு மதிப்பீடு

Bio‑Oil® Dry Skin Gel தகுதிபெற்ற நச்சுயியல் நிபுணர்களால் பாதுகாப்பு மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது மற்றும் அது கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உள்ளிட்ட பெரியவர்கள் மற்றும் மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அதன் திட்டமிட்ட பயன்பாட்டிற்குப் பாதுகாப்பானது என வகைப்படுத்தப்பட்டுள்ளது.


வறண்ட தோல் மருத்துவப் பரிசோதனை

பரிசோதனை மையம் காம்ப்லைஃப் இத்தாலியா S.r.l, இத்தாலி நோக்கம் தோல் ஈரப்பதமாக்குதலை மேம்படுத்துவதில் Bio‑Oil® Dry Skin Gel-இன் செயல்திறனைப் பரிசோதிப்பதற்கான மருத்துவ மதிப்பீடு. மாதிரி ஆய்வுக்குட்படுநர்கள்: ஃபிட்ஸ்பாட்ரிக் தோல் வகைகள் II-V கொண்ட மற்றும் கால்களின் வெளிப்புற கீழ்ப் பகுதியில் மருத்துவ ரீதியாக வறண்ட / மிக வறண்ட தோலைக் கொண்டுள்ள, மற்றும் சேர்க்கப்படும் நேரத்தில் 40-க்குக் குறைவான கார்னியோமீட்டர் மதிப்புகளைக் கொண்ட 40 ஆரோக்கியமான பெண் பங்கேற்பாளர்கள். சோதனைத் தளம்: அனைத்து ஆய்வுக்குட்படுநர்களின் ஒரு காலின் கீழ்ப்பகுதி முழுவதும் சோதனைத் தயாரிப்பு தடவப்படுகின்றது. பங்கேற்பாளர்களின் வயது: 40–65. முறையியல் உடல் பிரிக்கப்பட்ட, மதிப்பீட்டாளருக்கு மறைக்கப்பட்ட, தற்போக்காக்கப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ கருவிவழி ஆய்வு. ஆய்வுக்குட்படுநர்கள் தொடக்க நோய்ப் பரிசோதனை மதிப்பீட்டிலும், அதைத் தொடர்ந்து 7 நாள் உலரவைப்புக் காலம், 28-நாள் சிகிச்சைக் காலம் மற்றும் 3-நாள் தொடர் கண்காணிப்புக் காலத்திலும் (பின்னோக்குப் பகுப்பாய்வு) பங்கேற்றனர். உலரவைப்புக் காலத்தின்போதும், ஆய்வு முழுவதும் ஆய்வுக்குட்படுநர்கள் தங்கள் கால்களை டவ் பியூட்டி பார் சோப் கொண்டு தினமும் இரண்டு முறை கழுவினர். அதன் பிறகு ஒதுக்கீடு செய்யப்பட்ட கீழ்க் காலுக்கு தினமும் இரண்டு முறை Bio‑Oil® Dry Skin Gel தடவப்பட்டது, மற்றொரு கால் சிகிச்சை அளிக்கப்படாமல் வைக்கப்பட்டது. நோய்ப் பரிசோதனை மதிப்பீடு, அடிப்படைச் சிகிச்சை மற்றும் நாள்கள் 1, 3, 6, 8, 10, 14, 21, 28, 29, 30 மற்றும் 31 ஆகிய தினங்களில் மருத்துவ மதிப்பீடுகள் மற்றும் கருவிவழி மதிப்பீடுகள் நடத்தப்பட்டன. கட்டுப்பாட்டில் உள்ள சிகிச்சையளிக்கப்படாத இடமும் எல்லா நேரங்களிலும் மதிப்பீடு செய்யப்பட்டது. மதிப்பீடு பின்வருமாறு மேற்கொள்ளப்பட்டது: பயிற்சி பெற்ற காட்சி மதிப்பீட்டாளர் மூலம் பங்கேற்பாளர்களுக்கு தோல் வறட்சிக்கான மருத்துவ தரமதிப்பீடு வழங்கப்பட்டது (0-5 வரையிலான ஓர் அளவுகோலில்). தோல் நீரேற்றத்தின் அளவறி மதிப்பீடு கார்னியோமீட்டர் மூலம் மேற்கொள்ளப்பட்டது. தடுப்புச் செயல்பாட்டின் ஓர் அறிகுறியாக டிரான்ஸ்எபிடெர்மல் நீரிழப்பு (Transepidermal Water Loss, TEWL) அளவறி மதிப்பீடு டெவாமீட்டர் மூலம் மேற்கொள்ளப்பட்டது. முடிவு அடிப்படை மதிப்புகள் மற்றும் சிகிச்சையளிக்கப்படாத (கட்டுப்பாட்டு) பகுதி இரண்டுடனும் ஒப்பிடும்போது, பரிசோதனை முறையில் கண்காணிக்கப்படும் சரிபார்ப்பில் தோல் ஈரப்பதமாக்குதல், தடுப்புச் செயல்பாடு மற்றும் வறண்ட தோலின் தோற்றம் (வறட்சியின் மருத்துவத் தரமதிப்பீடு) ஆகியவற்றில் புள்ளியியல் ரீதியாக குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை உறுதிப்படுத்தியது. வறட்சியின் மருத்துவத் தரமதிப்பீட்டுக்கு, 62% பங்கேற்பாளர்களிடம் 1-ஆம் நாளில் இருந்தும், 85%-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களிடம் 3-ஆம் நாளில் இருந்தும் புள்ளியியல் ரீதியாக குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் காணப்பட்டன. 21-ஆம் நாளில் இருந்து, 100% பங்கேற்பாளர்களிடம் முன்னேற்றம் காணப்பட்டது. 28-ஆம் நாளில், பங்கேற்பாளர்களிடம் 1-ஆம் நாளில் கவனிக்கப்பட்ட மருத்துவத் தரமதிப்பீட்டு மதிப்பெண்ணில் 3.5 மடங்குக்கு மேல் முன்னேற்றம் காணப்பட்டது. 28 நாள்கள் பயன்படுத்திய பிறகு, 100% பங்கேற்பாளர்களிடம் தோல் ஈரப்பதமாக்குதலில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்பட்டது, இது 1-ஆம் நாளில் காணப்பட்டதைக் காட்டிலும் இரு மடங்குக்கு மேற்பட்ட முன்னேற்றம் ஆகும். இதேபோல, 28 நாள்கள் பயன்படுத்திய பிறகு 82% பங்கேற்பாளர்களிடம் TEWL குறிப்பிடத்தக்க அளவு குறைந்து காணப்பட்டது, இது 1-ஆம் நாளில் காணப்பட்டதைக் காட்டிலும் 5.5 மடங்குக்கு மேல் அதிக முன்னேற்றம் ஆகும். தோல் ஈரப்பதமாக்குதல், தடுப்புச் செயல்பாடு மற்றும் வறண்ட தோலின் தோற்றம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் Bio‑Oil® Dry Skin Gel-இன் செயல்திறன் தயாரிப்பின் பயன்பாடு நிறுத்தப்பட்ட பின்னரும் 3 நாள்கள் தொடர் கண்காணிப்புக் காலத்திலும் உறுதிசெய்யப்பட்டது.


கூருணர்வுத் தோல் பரிசோதனை

பரிசோதனை மையம் காம்ப்லைஃப் இத்தாலியா S.r.l, இத்தாலி நோக்கம் Bio‑Oil® Dry Skin Gel தோல் எரிச்சலை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறை மதிப்பிடுதல். மாதிரி ஆய்வுக்குட்படுநர்கள்: 30 பங்கேற்பாளர்கள்; 28 பெண்கள் மற்றும் 2 ஆண்கள், அனைவரும் லாக்டிக் அமில உணர்திறன் சோதனையின்படி கூருணர்வுத் தோலைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டவர்கள். பங்கேற்பாளர்களின் வயது: 18–70. முறையியல் கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வு. இரண்டு பகுதிகள் மதிப்பீடு செய்யப்பட்டன: எதிர்மறைக் கட்டுப்பாடு (கனிமமற்ற நீர்) தடவப்பட்ட பகுதி மற்றும் Bio‑Oil® Dry Skin Gel தடவப்பட்ட பகுதி. சோதனைத் தயாரிப்புகள் Finn Chamber®-ஐப் பயன்படுத்தி 48 மணிநேர காலத்திற்கு பங்கேற்பாளர்களின் பின்பகுதியில் தடவப்பட்டன. பேட்ச் அகற்றப்பட்ட 15 நிமிடங்கள், 1 மணி மற்றும் 24 மணிநேரத்திற்குப் பிறகு முதன்மை தோல் எரிச்சலை மதிப்பீடு செய்ய, ஒரு தோல் மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் தோல் எதிர்வினைகள் மதிப்பீடு செய்யப்பட்டன. தோல் எதிர்வினைகள் 0-4 வரையுள்ள அளவுகோலைப் பயன்படுத்தி மதிப்பிடப்பட்டன (0 என்பது எரிதிமா, நீர்வீக்கம் அல்லது பிற வகை தோல் எரிச்சல்கள் இல்லை என்பதையும், 4 என்பது கடுமையான எரிதிமா மற்றும் நீர்வீக்கத்துடன், தடவிய பகுதியையும் தாண்டி அடர் சிவப்பு நிறத் தோற்றம் மற்றும் விரிவடைந்த வீக்கம் இருக்கின்றது என்பதையும் குறிக்கிறது. முடிவு Bio‑Oil® Dry Skin Gel-இன் தோலின் பொறுத்துக்கொள்ளும் தன்மை ‘எரிச்சல் இல்லாதது’ எனக் கருதப்பட்டது.


காமெடோஜெனிக் சாராத பரிசோதனை

பரிசோதனை மையம் காம்ப்லைஃப் இத்தாலியா S.r.l, இத்தாலி நோக்கம் Bio‑Oil® Dry Skin Gel-இன் காமெடோஜெனிக் சாத்தியக்கூறை மதிப்பிடுதல். மாதிரி ஆய்வுக்குட்படுநர்கள்: 20 பங்கேற்பாளர்கள்; பல்வேறு இனங்களைச் சேர்ந்த, முகப்பருவால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ள 18 பெண்கள் மற்றும் 2 ஆண்கள். பங்கேற்பாளர்களின் வயது: 18–65. முறையியல் கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வு. இந்தத் தயாரிப்பு பங்கேற்பாளர்களின் முதுகின் மேல்பகுதியில் ஒரு வடிதாள் தட்டின் மீது தடவப்பட்டது. பேட்ச்கள் 48 முதல் 72 மணிநேரம் வரை அந்த இடத்திலேயே விடப்பட்டன, அதன் பின் அவை அகற்றப்பட்டு மீண்டும் தடவப்பட்டது. தொடர்ந்து 4 வாரங்களுக்கு மொத்தமாக 12 பேட்ச்கள் தடவப்பட்டன. எதிர்மறைக் கட்டுப்பாடு (கனிமமற்ற நீர்), சோதனைத் தயாரிப்பு (Bio‑Oil® Dry Skin Gel) மற்றும் நேர்மறைக் கட்டுப்பாடு (அறியப்பட்ட காமெடோஜெனிக் தயாரிப்பாகிய லானோலின் ஆல்கஹால்) ஆகியவற்றை ஒப்பிடுவதன் மூலம் மூன்று பகுதிகள் மதிப்பிடப்பட்டன. ஒவ்வொரு தயாரிப்பைத் தடவுவதற்கு முன்னரும் தடவிய பின்னரும் காமெடோன்கள் காணப்படுவதை ஒப்பிடுவதற்காக ஒவ்வொரு பேட்ச்சையும் அகற்றிய 15 நிமிடங்களுக்குப் பிறகு தோல் மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் தோல் எதிர்வினைகள் மருத்துவ ரீதியாக மதிப்பிடப்பட்டன. முடிவு Bio‑Oil® Dry Skin Gel காமெடோஜெனிக் இல்லாதது எனக் கண்டறியப்பட்டது. Bio‑Oil® Dry Skin Gel தடவப்பட்ட பகுதி எதிர்மறைக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கணிசமான வித்தியாசம் எதையும் காண்பிக்கவில்லை. நேர்மறைக் கட்டுப்பாடு முகப்பருவைத் தூண்டியது.


திறப்படைப்பு ஆய்வு

பரிசோதனை மையம் ரிகானோ லெபாரட்டரீஸ், மிலன், இத்தாலி நோக்கம் Bio‑Oil® Dry Skin Gel-இன் திறப்படைப்பையும், TEWL-ஐக் குறைப்பதன் மூலம் ஈரப்பதத்தைத் தக்கவைக்க தோலுக்கு உதவும் அதன் திறனையும் பரிசோதனை முறையில் தீர்மானித்தல். முறையியல் மனித தோலின் மேற்பரப்புப் பண்புகளைப் பிரதிபலிக்கின்ற, Vitro-Skin எனப்படும் பகுதி ஊடுருவும் சவ்வினால் மூடப்பட்ட முகவைகளில் அறியப்பட்ட அளவு தண்ணீர் விடப்பட்டது. தயாரிப்பு சவ்வின் மீது தடவப்பட்டு, குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு முகவைகளில் நீரிழப்பின் விகிதம் அளவிடப்பட்டது. இது சவ்வின் மீது எந்தத் தயாரிப்பும் இன்றி கட்டுப்பாட்டு முகவைகளில் ஏற்பட்ட நீரிழப்பின் விகிதத்துடன் ஒப்பிடப்பட்டது. முடிவு நீராவி பரிமாற்ற வீதம் (Water Vapour Transmission Rate, WVTR) பரிசோதனை முறையியல் என்பது தயாரிப்புகளின் திறப்படைப்பை அளவிடுவதற்கான ஒரு தரநிலைப் பரிசோதனை ஆகும். WVTR மதிப்பில் ஏற்படும் குறைவானது ஒரு குறிப்பிட்ட உருவாக்கம் திறப்படைப்பைக் கொண்டுள்ளது என்பதைக் குறிக்கிறது. Vitro-Skin சவ்வின் மீது தடவப்படும்போது சிகிச்சை அளிக்கப்படாத கட்டுப்பாட்டுடன் ஒப்பிடும்போது Bio‑Oil® Dry Skin Gel ஆனது WVTR மதிப்புகளை புள்ளியியல் ரீதியாகக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டது. இந்தப் பரிசோதனைக் குழாய் முடிவு Bio‑Oil® Dry Skin Gel ஈரப்பதத்தை இயற்கையாகத் தக்கவைக்க தோலுக்கு உதவுவதன் மூலம் வறண்ட தோல் அடையாளங்களையும் அறிகுறிகளையும் தணிக்க உதவுகிறது.


பயன்பாடு

பயன்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் Bio‑Oil® Dry Skin Gel-ஐ வறண்ட தோலின் மீது தேவைக்கேற்பத் தடவவும். வறண்ட தோல் நீடித்து நிலைக்கக்கூடியதாக இருந்தால், காலை மற்றும் மாலை என தினமும் இரண்டு முறை தடவவும். சிறந்த முடிவுகளுக்கு, ஷவர் குளியல் அல்லது சாதாரண குளியலுக்குப் பிறகு சுத்தமான தோலின் மீது தயாரிப்பு தடவப்பட வேண்டும். பிற தயாரிப்புகளைப் பயன்படுத்துவதாக இருந்தால், Bio‑Oil® Dry Skin Gel முழுமையாக தோலுக்குள் உறிஞ்சப்பட்ட பிறகு அவற்றைப் பயன்படுத்தவும். Bio‑Oil® Dry Skin Gel குறிப்பாக உடல் மீது பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டது என்றாலும், முகத்திலும் அதைப் பயன்படுத்தலாம். பயன்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் Bio‑Oil® Dry Skin Gel புறமருந்து ஒப்பனைப் பூச்சாகப் பயன்படுத்துவதற்காக மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தயாரிப்பை திறந்த காயம் அல்லது உடைந்த தோல் மீது தடவக் கூடாது. கண்களில் படாமல் பூசவும். கண்களில் பட்டால் கண்களை நீரால் சுத்தமாக கழுவவும். குழந்தைகளுக்கு எட்டாதவாறு வைக்கவும். பயன்படுத்தும் அளவு வறண்ட தோலுக்கான கிரீம்கள், லோஷன்கள் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றைத் தடவும்போது இந்தத் தயாரிப்புகளில் பெருமளவு பகுதிப்பொருளாக நீர் இருப்பதால் தோலின் மீது படும்போது நீர் ஆவியாகிவிடும் என்பதால் இவற்றை அதிக அளவு தடவ வேண்டும். Bio‑Oil® Dry Skin Gel ஆனது 84% எண்ணெய்கள், வெண்ணெய் மற்றும் மெழுகினால் ஆனது என்பதால், அதே அளவிலான உடல் பகுதியில் பயன்படுத்த கணிசமான அளவு குறைந்த தயாரிப்பு இருந்தாலே போதுமானது. கர்ப்பத்தின்போது பயன்படுத்துதல் Bio‑Oil® Dry Skin Gel கர்ப்பக் காலத்தின்போது பயன்படுத்துவதற்குப் பாதுகாப்பானது. வைட்டமின் A மற்றும் கர்ப்பம் பெண்கள் வழக்கமாக கர்ப்பக் காலத்தில் வைட்டமின் A நிறைந்த ஊட்டச்சத்து துணைப்பொருள்களைக் குறைத்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. எனவே வைட்டமின் A கொண்ட தோல் பராமரிப்புத் தயாரிப்புகளைப் பயன்படுத்துவது குறித்த பிரச்சனைகள் அவர்களுக்கு இருக்கலாம். தோலின் மீது தடவப்படும் எந்தவொரு பொருளும் அதன் நச்சுத்தன்மை வரம்பை விட அதிக அளவுகளில் காணப்பட்டால் மட்டுமே அது தீங்கு விளைவிக்கக் கூடியதாகும். தோலானது ஊடுருவலுக்கு கணிசமான தடுப்பு அரணாக விளங்குவதால், மேற்பரப்பில் தடவப்படும் வைட்டமின் A-இன் சிறு பகுதி மட்டுமே உடலுக்குள் நுழைகிறது. நுகர்வோர் பாதுகாப்புக்கான ஐரோப்பிய ஆணையத்தின் அறிவியல் குழு (Scientific Committee on Consumer Safety, SCCS) ஒப்பனை பகுதிப்பொருள்களாகப் பயன்படுத்தப்படுகின்ற வைட்டமின் A மற்றும் அதன் எஸ்டர்களை மதிப்பீடு செய்துள்ளது. வைட்டமின் A பாடி லோஷன்களில் பயன்படுத்தப்படும்போது ரெட்டினோலுக்கு இணையான பொருள்களின் அதிகபட்ச செறிவு 0.05% ஆக இருக்கும் வரை அது பாதுகாப்பானது என SCCS கருத்துத் தெரிவித்துள்ளது. Bio‑Oil® Dry Skin Gel உருவாக்கத்தில் காணப்படுகின்ற வைட்டமின் A பாடி லோஷனுக்கு அதிகபட்சமாக அனுமதிக்கத்தக்க செறிவை விட மிகக் குறைவாக இருப்பதால் கர்ப்பக் காலம் முழுவதும் இதைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த முடியும். ரோஸ்மேரி எண்ணெய் மற்றும் கர்ப்பக் காலம் அதிக செறிவு கொண்ட ரோஸ்மேரி எண்ணெய் ஒரு மாதவிடாய்த் தூண்டி எனக் கண்டறியப்பட்டுள்ளதால், அது மாதவிடாய் ஏற்படுவதைத் தூண்டி முன்கூட்டியே பிரசவ வலியைத் தூண்டுவதற்கான சாத்தியம் உள்ளது. இதன் காரணமாக ரேஸ்மேரி எண்ணெயை அதிக செறிவுகளில் பயன்படுத்துகின்ற அரோமாதெரபிஸ்ட் மற்றும் மூலிகை மருத்துவர்கள் கர்ப்பக் காலத்தில் இதைப் பயன்படுத்த வேண்டாம் எனப் பரிந்துரைக்கின்றனர். ஆனாலும், Bio‑Oil® Dry Skin Gel-இல் ரேஸ்மேரி எண்ணெயின் செறிவு மிகக் குறைவு என்பதால் கர்ப்பக் காலத்தின்போது இதைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதாகும். தாய்ப்பால் கொடுக்கும்போது பயன்படுத்துதல் Bio‑Oil® Dry Skin Gel தாய்ப்பால் கொடுக்கும்போது பயன்படுத்துவது பாதுகாப்பானது, ஆனால் முலைக்காம்புகளில் அதைத் தடவுவதைத் தவிர்க்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தீங்குதரும் விளைவுகள் ஏற்படுவதற்கான சாத்தியகூறுகள் இல்லை என்றாலும் கூட, பச்சிளம் குழந்தைகள் மிகுந்த உணர்திறன் கொண்டவர்கள் என்பதால் அவர்கள் Bio‑Oil® Dry Skin Gel-ஐ உள்விழுங்கக் கூடாது. மழலைகள் மற்றும் குழந்தைகளிடம் பயன்படுத்துதல் Bio‑Oil® Dry Skin Gel மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மீது பயன்படுத்துவதன் பாதுகாப்பு மதிப்பிடப்படவில்லை. பிறந்தது முதல் சில வருடங்களில், மனித உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வளர்ச்சி உள்ளிட்ட பல மாற்றங்கள் நடைபெறுகின்றன. எனவே இது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகளிடம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது. சூரிய ஒளியில் பயன்படுத்துதல் Bio‑Oil® Dry Skin Gel மீது நடத்தப்பட்ட பரிசோதனைகள் இது வேனிற்கட்டியை தீவிரமடையவோ அல்லது அதிகரிக்கவோ செய்வதில்லை எனக் காண்பித்துள்ளன. எனவே சூரிய ஒளியில் இதைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது, ஆனாலும் இந்தத் தயாரிப்பு சூரியனின் UVA மற்றும் UVB கதிர்களின் தீங்குதரும் விளைவுகளுக்கு எதிராக எந்தப் பாதுகாப்பும் அளிப்பதில்லை என்பதால் இந்தத் தயாரிப்பை குறைந்தபட்சம் 30 சூரிய ஒளிப் பாதுகாப்புக் காரணி (Sun Protection Factor, SPF) கொண்ட பரந்த நிறமாலை சன்ஸ்க்ரீன் உடன் சேர்த்துப் பயன்படுத்த வேண்டியது முக்கியமாகும். சளி சவ்வுகள் மீது அல்லது அவற்றுக்கு அருகில் பயன்படுத்துதல் Bio‑Oil® Dry Skin Gel அனைத்துப் பயன்பாடுகளுக்கும் பாதுகாப்பானது என வகைப்படுத்தப்பட்டுள்ளது, ஆனாலும் சளி சவ்வுகள் மீது இந்தத் தயாரிப்பைப் பயன்படுத்துவது நியாயமாக ஊகித்தறியக்கூடிய பயன்பாடு அல்ல என்பதால் அவற்றில் படுமாறு இதைப் பயன்படுத்துவது குறித்த பாதுகாப்பு பரிசோதிக்கப்படவில்லை. கதிரியக்கச் சிகிச்சை அல்லது வேதிச் சிகிச்சையுடன் இணைத்துப் பயன்படுத்துதல் Bio‑Oil® Dry Skin Gel கதிரியக்கத்தை உறிஞ்சக்கூடிய பகுதிப்பொருள்கள் எதையும் கொண்டிருக்கவில்லை என்றாலும், கதிரியக்கச் சிகிச்சை அல்லது வேதிச் சிகிச்சையை எடுத்துக்கொள்ளும் நபர்கள் இத்தயாரிப்பைப் பயன்படுத்துவதற்கு முன் மருத்துவ நிபுணரின் ஆலோசனையைப் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மருத்துவ நிலைமைகளுடன் பயன்படுத்துதல் Bio‑Oil® Dry Skin Gel தோல் அழற்சி, எக்சிமா, சொரியாசிஸ் மற்றும் வெப்பக் கொப்புளம் போன்ற மருத்துவ நிலைமைகளின் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளிக்கலாம் என்றாலும், இந்த நிலைமைகளைக் கொண்டவர்கள் தயாரிப்பைப் பயன்படுத்துவதற்கு முன் மருத்துவ நிபுணரின் ஆலோசனையைப் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது. கூருணர்வுத் தோல் மீது பயன்படுத்துதல் Bio‑Oil® Dry Skin Gel-ஐக் கூருணர்வுத் தோல் மீது பயன்படுத்தலாம். 18 முதல் 70 வரை வயதுடைய 30 பங்கேற்பாளர்களிடம் நடத்தப்பட்ட தோல் எரிச்சல் குறித்த ஆய்வில், எந்த ஆய்வுக்குட்படுநர்களும் Bio‑Oil® Dry Skin Gel-க்கு எந்த பாதக எதிர்வினைகளையும் அனுபவிக்கவில்லை. எண்ணெய்ப் பசையுள்ள தோல் மீது பயன்படுத்துதல் Bio‑Oil® Dry Skin Gel எண்ணெய்ப் பசையுள்ள தோல் மீது பயன்படுத்தலாம். முகப்பரு வருவதற்கு வாய்ப்புள்ள தோலைக் கொண்டிருக்கும் 18-65 வயதுடைய 20 பங்கேற்பாளர்களிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், Bio‑Oil® Dry Skin Gel காமெடோஜெனிக் இல்லாதது எனக் கண்டறியப்பட்டது. முகப்பருவால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ள தோல் மீது பயன்படுத்துதல் Bio‑Oil® Dry Skin Gel-ஐ முகப்பருவால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ள தோல் மீது பயன்படுத்தலாம். முகப்பரு வருவதற்கு வாய்ப்புள்ள தோலைக் கொண்டிருக்கும் 18-65 வயதுடைய 20 பங்கேற்பாளர்களிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், Bio‑Oil® Dry Skin Gel காமெடோஜெனிக் இல்லாதது எனக் கண்டறியப்பட்டது. முகப்பருவால் பாதிக்கப்பட்ட நபர்கள் Bio‑Oil® Dry Skin Gel பயன்படுத்துவதற்கு முன் மருத்துவ நிபுணரின் ஆலோசனையைப் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது.


வறண்ட தோல் அறிகுறிகள் மற்றும் காரணங்கள்

அறிகுறிகள் பொலிவற்ற மற்றும் செதில்போன்ற தோல், நுண்ணிய கோடுகள், கிரே அல்லது சாம்பல் நிறத் தோல் மற்றும் சொரசொரப்பான மற்றும் இறுக்கமான உணர்வு ஆகியவை வறண்ட தோல் அறிகுறிகள் ஆகும். காரணங்கள் வறண்ட தோலானது புற மற்றும் அகக் காரணிகளால் ஏற்படுகின்றது. புறக் காரணிகள்: வறண்ட வானிலை தோலின் உள்பகுதியில் இருந்து ஈரப்பதத்தை லிப்பிட் ஈரடுக்கு வாயிலாக வறண்ட வெளிப்புறக் காற்றுக்குள் உறிஞ்சி எடுத்துவிடுகிறது. ஏர் கண்டிஷன்கள் மற்றும் ஹீட்டர்கள் காற்றிலுள்ள ஈரப்பதத்தை எடுத்துக்கொள்கின்றன, அதன் காரணமாக அவை செயற்கையான வறண்ட வானிலையை உருவாக்கி தோலில் இருந்து ஈரப்பதத்தை எடுத்துவிடுகின்றன. தினமும் துணி துவைத்தல் மற்றும் கடுமையான டிடர்ஜென்ட்களின் பாதிப்புக்கு உள்ளாதல் ஆகியவற்றின் காரணமாக லிப்பிட் ஈரடுக்கு உரித்து எடுக்கப்படுவதால், தோலில் உள்ள ஈரப்பதம் எளிதாக வெளியேறுகின்றது. அகக் காரணிகள்: உடல் முதுமையடையும்போது, தோல் சில லிப்பிடுகளை உற்பத்தி செய்வதால் லிப்பிட் ஈரடுக்கு மெலிந்து ஈரப்பதம் வெளியேறுவதை எளிதாக்குகிறது. லிப்பிட் ஈரடுக்கில் இயற்கையாகவே செரமைடுகளின் அளவு குறைவதன் காரணமாக வறண்ட தோல் உருவாவதில் மரபியல் ஒரு பங்கு வகிக்கலாம். இதனால் தோல் தடுப்பின் திறப்படைப்பு குறைந்து, ஈரப்பத இழப்பு இயல்பான அளவுகளை விட அதிகரிக்கிறது. தோலின் pH தடுப்புச் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தோலில் அதிகமான pH அளவு காணப்படுவது லிப்பிட் ஈரடுக்கின் ஆரோக்கியமான செயல்பாட்டைப் பாதிக்கிறது.


தயாரிப்பு

Bio‑Oil® Dry Skin Gel தயாரிப்பு ஒப்பனைப் பொருள்களுக்கான ISO 22716:2007-இன் சிறந்த தயாரிப்பு நடைமுறை (Good Manufacturing Practice, GMP) நிபந்தனைகளை உறுதிப்படுத்துகிறது. Bio‑Oil® Dry Skin Gel தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்ற அனைத்து மூலப் பொருள்களும் பகுப்பாய்வுச் சான்றிதழ் (Certificate of Analysis, COA) உடன் வருகின்றன மற்றும் அனைத்து பொதியிடுதல் பொருள்களும் உறுதிப்படுத்தும் சான்றிதழ் (Certificate of Conformance, COC) உடன் வருகின்றன. தரக் கட்டுப்பாட்டுப் பரிசோதனைகளில் ஒப்புதல் பெறப்படும் வரை மூலப் பொருள்கள் அல்லது பொதியிடுதல் பொருள்கள் எதுவும் தயாரிப்புக்கு விடுவிக்கப்படுவதில்லை. கலக்கப்பட்ட ஒவ்வொரு Bio‑Oil® Dry Skin Gel பேட்ச்சுக்கும் ஒரு பிரத்தியேக பேட்ச் எண் வழங்கப்படுகின்றது. பேட்ச்சில் இருந்து ஒரு மாதிரி எடுக்கப்பட்டு, அதன் தோற்றம், தெளிவு, வாசனை, ஸ்பெக்ட்ரோஃபோட்டோமெட்ரியால் அடையாளம் கண்டறிதல், அடர்த்தி, பாகுமை மற்றும் நுண்ணியிரியல் ஆகியவற்றிற்காக ஆய்வகத்தில் பரிசோதிக்கப்படுகின்றது. மாதிரி நான்கு வருடங்களுக்கு சேமித்து வைக்கப்படுகின்றது. Bio‑Oil® Dry Skin Gel-ஐ நிரப்புவதும் பொதியிடுவதும் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு நிலையத்தில் மேற்கொள்ளப்படுகின்றது. தூசி மூலமான மாசுபாடு ஏற்படுவதைத் தடுக்க காற்றானது அதிக திறன் கொண்ட துகள் காற்று (High Efficiency Particulate Air, HEPA) வடிகட்டும் அமைப்பு வழியாகச் செலுத்தப்படுகின்றது. உற்பத்திப் பிரிவுகளில் பணிபுரியும் பணியாளர்கள் தொப்பி, முகக் கவசங்கள், முக மறைப்புகள், கையுறைகள் மற்றும் ஷூ கவர்கள் போன்றவற்றை அணிகின்றனர். அசாதாரணக் குறைபாடுகளுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பிரிவுகளில் இருந்து வழக்கமான இடைவெளிகளில் மாதிரிகள் எடுக்கப்பட்டு தரக் கட்டுப்பாட்டுத் துறையால் ஆய்வு செய்யப்படுகின்றன. பாட்டில், அட்டைப்பெட்டி மற்றும் ஷிப்பர் மீது பேட்ச் எண் அச்சிடப்படுகின்றது மற்றும் தயாரிக்கப்பட்ட ஒவ்வொரு பேட்ச்சில் இருந்தும் தக்கவைப்பு மாதிரி எடுக்கப்பட்டு நான்கு வருடங்களுக்குப் பாதுகாத்து வைக்கப்படுகின்றது. Bio‑Oil® Dry Skin Gel-இன் தயாரிப்பில் தீங்கு விளைவிக்கின்ற மாசு உமிழ்வுகள், அபாயகரமான கழிவு அல்லது கழிவு நீர் எதுவும் உருவாக்கப்படுவதில்லை.


சேமித்து வைப்பதற்கான அறிவுறுத்தல்கள்

Bio‑Oil® Dry Skin Gel குளிர்ச்சியான இடத்தில், நேரடி சூரிய ஒளி படாமல் வைக்கப்பட வேண்டும்.


மறுசுழற்சி செய்தல்

அனைத்து Bio‑Oil® Dry Skin Gel பொதியிடுதல் பொருள்களும் (பாட்டில், மூடி மற்றும் அட்டைப்பெட்டி) மறுசுழற்சி செய்யக்கூடியவை ஆகும்.


திறந்த பின் பயன்பாட்டுக் காலம் (PERIOD AFTER OPENING, PAO)

Bio‑Oil® Dry Skin Gel 12 மாத PAO-ஐக் கொண்டுள்ளது. திறந்த பிறகு இந்தக் காலத்திற்குள் இத்தயாரிப்பைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது மற்றும் நுகர்வோருக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் பயன்படுத்த முடியும்.


சான்றளிப்புகள்

Bio‑Oil® Dry Skin Gel ஹலால் மற்றும் கோஷர் சான்றிதழ் பெற்றுள்ளது.


பாதக எதிர்வினைகள்

அனைத்து ஒப்பனைத் தயாரிப்புகளைப் போன்றே Bio‑Oil® Dry Skin Gel பாதுகாப்பான நச்சுயியல் விவரக்குறிப்பைக் கொண்டுள்ளது மற்றும் இது தொடர்பான சர்வதேச விதிமுறைகளைப் பூர்த்தி செய்கிறது என்றாலும், Bio‑Oil® Dry Skin Gel பயனர்கள் தயாரிப்பைப் பயன்படுத்தும்போது பாதக எதிர்வினையை எதிர்கொள்ளக்கூடும். ஏதேனும் ஒரு பாதக எதிர்வினை ஏற்பட்டால், தயாரிப்பைப் பயன்படுத்துவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பாதக தோல் எதிர்வினை அறிகுறிகள் தோல் தடிப்பு, வீக்கம் மற்றும் அழற்சி ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கலாம், இது பொதுவாக தயாரிப்பு தடவப்பட்ட பகுதியில் ஏற்படும். இந்த எதிர்வினைகளுடன் சேர்த்து அரிப்பு மற்றும் சிறிதளவு அசௌகரியம் ஆகியவையும் இருக்கலாம். பெரும்பாலான நிகழ்வுகளில், பாதக எதிர்வினைகள் தயாரிப்பு பயன்படுத்துவதை நிறுத்திய பிறகு இரண்டு முதல் மூன்று நாள்களுக்குள் மறைந்துவிடும். தோல் தனது அசல் நிலைக்குத் திரும்பும் வரை, எதிர்வினை படிப்படியாகத் தணிந்து வரும் என்பதால் தோல் வறண்டும் செதில் போன்றும் காணப்படலாம். Bio‑Oil® Dry Skin Gel தடவுவதனால் ஏற்படுவதற்குச் சாத்தியமுள்ள ஒவ்வாமை எதிர்வினை தொடர்பாக ஏதேனும் கவலை இருந்தால், இதைப் பரிசோதிக்க ஓர் எளிமையான ஒவ்வாமைப் பரிசோதனை செய்துகொள்வது நலம். இதைச் செய்ய சிறிதளவு தயாரிப்பை எடுத்து முன்கையின் உட்புறத்தில் தடவி, 24 மணிநேரத்தில் ஏதேனும் எதிர்வினை ஏற்படுகின்றதா எனக் காத்திருந்து பார்க்க வேண்டும். உணரக்கூடிய தோல் சிவத்தல் (எரிதிமா) அல்லது தோலில் இலேசான வீக்கம் (நீர்வீக்கம்) போன்றவை காணப்படுவது ஒவ்வாமை எதிர்வினையின் அறிகுறியாக இருக்கலாம்.


விலங்குகளிடம் பரிசோதிக்கப்படவில்லை

Bio‑Oil® Dry Skin Gel மற்றும் அதன் அங்கமாக உள்ள மூலப்பொருள்கள் ஒப்பனை நோக்கங்களுக்கான விலங்கு பரிசோதனை தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்குமுறை விதிகளைப் பின்பற்றித் தயாரிக்கப்பட்டுள்ளன. Bio‑Oil® Dry Skin Gel அல்லது அதன் பகுதிப் பொருள்கள் எதுவும், Bio‑Oil அல்லது அதன் மூலப்பொருள் விநியோகிப்பாளர்கள் எவராலும் விலங்குகளின் மீது பரிசோதிக்கப்படவில்லை.


தாவரப்பொருள் அல்ல

Bio‑Oil® Dry Skin Gel-இல் லானோலின் உள்ளது, இது செம்மறி ஆடுகளின் உரோமத்தில் இருந்து எடுக்கப்படும் மெழுகு ஆகும். அப்படிப் பார்க்கும்போது, Bio‑Oil® Dry Skin Gel தாவரப்பொருள் அல்ல.


எதிர்பாராமல் விழுங்குதல்

Bio‑Oil® Dry Skin Gel நச்சுத்தன்மை அற்றது என்பதால் Bio‑Oil® Dry Skin Gel எதிர்பாராமல் விழுங்கப்படும் பட்சத்தில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உணர்வுகளுக்கு அப்பால் வேறு எந்தப் பாதக விளைவுகளும் ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை. ஆனாலும், குறிப்பாக பச்சிளம் பிள்ளை அல்லது குழந்தையால் எதிர்பாராமல் விழுங்கப்படுதல் நிகழ்ந்தால், மருத்துவ ஆலோசனை பெறுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.


தோற்றத்தில் மாற்றம்

Bio‑Oil® Dry Skin Gel-இன் தோற்றத்தில் மாற்றம் ஏற்படக்கூடிய இரண்டு நிலைமைகள் உள்ளன. முதலாவது நிலைமை நீண்ட நேரத்திற்கு மிக அதிக அல்லது குறைந்த வெப்பநிலைகளின் தாக்கத்திற்கு ஜெல் உட்படுத்தப்படும்போது நிகழ்கிறது; மிக அதிக வெப்பநிலை ஜெல்லின் மேற்பரப்பில் உள்ள நீரை நீக்கிவிடுகின்றது, கொள்கலனைத் திறந்து வைத்திருக்கும்போது இந்நிகழ்வு வேகமாக நடக்கிறது. மாறாக, மிகக் குறைவான வெப்பநிலைகளில் இது உறைந்துவிடலாம். இரண்டு நிகழ்வுகளிலுமே ஜெல் வெண்மை நிறத் தோற்றத்தைப் பெறுகின்றது. பயன்படுத்தும்போது ஜாடிக்குள் தண்ணீர் அல்லது வேறொரு திரவம் கலக்கும்போது இரண்டாவது நிலைமை ஏற்படுகின்றது. திரவம் உருவாக்கத்தில் உள்ள பால்மமாக்கியுடன் இடைவினை புரிந்து பசைக்குழம்பாக்கும் செயல்முறையைத் தொடங்குகிறது, இதன் விளைவாக ஜெல் வெண்மை நிறமாக மாறுகின்றது மற்றும் அதன் நிலைத்தன்மையும் மாறுகின்றது.


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்ட தேதி

22 ஆகஸ்டு 2023