பிராண்டு பெயர்

Bio‑Oil®


தயாரிப்பின் பெயர் மற்றும் அளவுகள்

பாடி லோஷன் 175 மிலி
பாடி லோஷன் 250 மிலி


அறிகுறி

தோல் ஈரப்பதமாக்குதலை கணிசமாக அதிகரிக்கிறது.


தோற்றம்

வெள்ளை திரவம்.


உருவாக்கம்

42% திறப்பு அடைக்கக்கூடிய மூலப்பொருள்கள் மற்றும் 14% ஈரம் கவர்பொருள்கள் கொண்ட லோஷன்.


மூலப்பொருட்கள்

Aqua, Dimethicone, Isopropyl Palmitate, Ethylhexyl Cocoate, Isododecane, Isopropyl Myristate, Urea, Polyglyceryl-2 Dipolyhydroxystearate, Glycerin, Pentylene Glycol, Dicaprylyl Carbonate, Polyglyceryl-3 Diisostearate, Sodium Lactate, Dipentaerythrityl Hexacaprylate / Hexacaprate, Gluconolactone, Rosa Canina Fruit Oil, Simmondsia Chinensis Seed Oil, Calendula Officinalis Extract, Butyrospermum Parkii Oil, Helianthus Annuus Seed Oil, Glycine Soja Oil, Isostearyl Isostearate, Bisabolol, Octyldodecyl PCA, Retinyl Palmitate, Tocopheryl Acetate, Linoleic Acid, Linolenic Acid, Tocopherol, Sodium PCA, Sodium Hyaluronate, Lactic Acid, Stearalkonium Hectorite, Propylene Carbonate.


பாதுகாப்பு மதிப்பீடு

Bio‑Oil® Body Lotion தகுதிபெற்ற நச்சுயியல் நிபுணர்களால் பாதுகாப்பு மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது மற்றும் அது கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உள்ளிட்ட பெரியவர்கள் மற்றும் மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அதன் திட்டமிட்ட பயன்பாட்டிற்குப் பாதுகாப்பானது என வகைப்படுத்தப்பட்டுள்ளது.


வறண்ட தோல் மருத்துவப் பரிசோதனை

பரிசோதனை மையம் காம்ப்லைஃப் இத்தாலியா S.r.l, இத்தாலி நோக்கம் தோல் ஈரப்பதமாக்குதலை மேம்படுத்துவதில் Bio‑Oil® Body Lotion-இன் செயல்திறனைப் பரிசோதிப்பதற்கான ஒரு மருத்துவ மதிப்பீடு. மாதிரி ஆய்வுக்குட்படுநர்கள்: ஃபிட்ஸ்பாட்ரிக் தோல் வகைகள் II-V கொண்ட மற்றும் கால்களின் வெளிப்புற கீழ்ப் பகுதியில் மருத்துவ ரீதியாக வறண்ட / மிக வறண்ட தோலைக் கொண்டுள்ள 30 ஆரோக்கியமான பெண் பங்கேற்பாளர்கள். சோதனைத் தளம்: சோதனைத் தயாரிப்பு அனைத்து ஆய்வுக்குட்படுநர்களின் காலின் வெளிப்புற, கீழ்ப் பகுதியில் உபயோகிக்கப்படுகின்றது. பங்கேற்பாளர்களின் வயது: 25–65. முறையியல் உடல் பிரிக்கப்பட்ட, மதிப்பீட்டாளருக்கு மறைக்கப்பட்ட, தற்போக்காக்கப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ கருவிவழி ஆய்வு. 7-நாள் காலத்திற்கு வறண்ட தோலை உண்டாக்குவதற்காக பங்கேற்பாளர்கள் தங்கள் கால்களை சோப்பு போட்டுக் கழுவினர். அடிப்படை மருத்துவ மற்றும் கருவிவழி மதிப்பீடுகள் எடுக்கப்பட்டன. நிர்ணயிக்கப்பட்ட காலின் பக்கவாட்டு கீழ்ப்பகுதியில் Bio‑Oil® Body Lotion தினமும் இரு முறை வீதம் 28 நாள்களுக்குப் பூசப்பட்டது, மற்றொரு காலுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. 1, 3, 6, 8, 10, 14, 21 மற்றும் 28 ஆகிய நாள்களில் மருத்துவ மதிப்பீடுகள் மற்றும் கருவிவழி மதிப்பீடுகள் நடத்தப்பட்டன. கட்டுப்பாட்டில் உள்ள சிகிச்சையளிக்கப்படாத இடமும் எல்லா நேரங்களிலும் மதிப்பீடு செய்யப்பட்டது. பயிற்சி பெற்ற காட்சி மதிப்பீட்டாளர் மூலம் ஆய்வுக்குட்படுநர்களுக்கு தோல் வறட்சிக்கான மருத்துவத் தரமதிப்பீடு வழங்கப்பட்டது (0-5 வரையிலான ஓர் அளவுகோலில்). தோல் நீரேற்றத்தின் அளவறி மதிப்பீடு கார்னியோமீட்டர் மூலம் மேற்கொள்ளப்பட்டது. தடுப்புச் செயல்பாட்டின் ஓர் அறிகுறியாக டிரான்ஸ்எபிடெர்மல் நீரிழப்பு (Transepidermal Water Loss, TEWL) அளவறி மதிப்பீடு டெவாமீட்டர் மூலம் மேற்கொள்ளப்பட்டது. கூடுதலாக, 8 மற்றும் 14-ஆம் நாள்களில் சுய மதிப்பீட்டுக் கேள்விப்பட்டியல் முடிக்கப்பட்டது. முடிவு சிகிச்சை அளிக்கப்படாத பகுதியுடன் ஒப்பிடும்போது, Bio‑Oil® Body Lotion கொண்டு அளிக்கப்பட்ட சிகிச்சை எல்லா நேரங்களிலும் 1-ஆம் நாளில் இருந்தே தோல் வறட்சியின் மருத்துவத் தரமதிப்பீட்டிலும், டெவாமீட்டர் மற்றும் கார்னியோமீட்டர் அளவீடுகளிலும் புள்ளியியல் ரீதியாக குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. தோல் வறட்சியின் மருத்துவத் தரமதிப்பீட்டைப் பொருத்தவரை, 96.7% பங்கேற்பாளர்களிடம் 14-ஆம் நாளில் இருந்து புள்ளியியல் ரீதியாக குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் காணப்பட்டன, இது 1-ஆம் நாளில் கண்ட முன்னேற்றத்தைப் போல கிட்டத்தட்ட இருமடங்கு ஆகும். 28 நாள்கள் பயன்படுத்திய பிறகு, தோல் ஈரப்பதமாக்குதலில் 100% பங்கேற்பாளர்கள் கணிசமான அதிகரிப்பை வெளிப்படுத்தினர், இது 1-ஆம் நாளில் கண்ட முன்னேற்றத்தைப் போல கிட்டத்தட்ட 4 மடங்கு அதிகமாகும். அதேபோல, 28 நாள்கள் பயன்படுத்திய பிறகு, TEWL-இல் 100% பங்கேற்பாளர்கள் கணிசமான குறைப்பை வெளிப்படுத்தினர், இது 1-ஆம் நாளில் கண்ட முன்னேற்றத்தைப் போல இரு மடங்கை விட அதிகமாகும். இந்தக் கண்டுபிடிப்புகள் சுய மதிப்பீட்டுக் கேள்விப்பட்டியலின் முடிவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டன.


வறண்ட தோல் பயனர் பரிசோதனை

பரிசோதனை மையம் அய்டன் குளோபல் ரிசர்ச், ஐக்கிய இராச்சியம். நோக்கம் ஒரு பாடி மாயிஸ்சுரைசராக Bio‑Oil® Body Lotion-இன் செயல்திறனை மதிப்பிடுதல். மாதிரி ஆய்வுக்குட்படுநர்கள்: நல்ல ஆரோக்கியமான 119 பெண் பங்கேற்பாளர்கள். பங்கேற்பாளர்களின் வயது: 25–65. முறையியல் 2-வார, ஒரு தளத்தில் மேற்கொள்ளப்படுகின்ற, வீட்டில் பயன்படுத்துபவருக்கான பரிசோதனை. பங்கேற்பாளர்கள் காலை மற்றும் மாலை என தினமும் இரு முறை தடவுமாறு அறிவுறுத்தப்பட்டது. தோலுக்குள் முழுமையாக உறிஞ்சப்படும் வரை மசாஜ் செய்யவும். மூன்று சிறு கேள்விப்பட்டியல்கள் முடிக்கப்பட்டன: முதலாவது முதல் முறை தடவிய பின்னர், இரண்டாவது 12 மணிநேரத்திற்குப் பின்னர் மற்றும் மூன்றாவது தயாரிப்பைப் பயன்படுத்திய 2 வாரங்களுக்குப் பின்னர். முடிவு பயன்பாடு: ’இதற்கு முன் தாங்கள் பயன்படுத்தியுள்ள எந்த ஈரப்பதமூட்டியையும் விட இந்தத் தயாரிப்பு இலேசாக உள்ளது’ என 95% பங்கேற்பாளர்கள் ஒப்புக்கொண்டனர். ’இதற்கு முன் தாங்கள் பயன்படுத்தியுள்ள எந்த ஈரப்பதமூட்டியையும் விட இந்தத் தயாரிப்பு மிக எளிதாகப் பரவுகின்றது’ என 93% பங்கேற்பாளர்கள் ஒப்புக்கொண்டனர். உறிஞ்சுதல்: ’இதற்கு முன் தாங்கள் பயன்படுத்தியுள்ள எந்த ஈரப்பதமூட்டியையும் விட இந்தத் தயாரிப்பு மிக எளிதாக உறிஞ்சுகிறது’ என 82% பங்கேற்பாளர்கள் ஒப்புக்கொண்டனர். ’இதற்கு முன் தாங்கள் பயன்படுத்தியுள்ள எந்த ஈரப்பதமூட்டியையும் விட இந்தத் தயாரிப்பு மிக விரைவாக உறிஞ்சுகிறது’ என 75% பங்கேற்பாளர்கள் ஒப்புக்கொண்டனர். ’தடவிய பிறகு இந்தத் தயாரிப்பு பிசுக்கு போன்ற படிவு எதையும் ஏற்படுத்துவதில்லை’ என 74% பங்கேற்பாளர்கள் ஒப்புக்கொண்டனர். ’இந்தத் தயாரிப்பைத் தடவிய பிறகு தங்களால் உடனடியாக ஆடை அணிய முடிகிறது’ என 86% பங்கேற்பாளர்கள் ஒப்புக்கொண்டனர். நீரேற்றம்: ’இந்தத் தயாரிப்பு தோலுக்கு உடனடியாக ஈரப்பதமூட்டிய உணர்வைத் தருகிறது’ என 93% பங்கேற்பாளர்கள் ஒப்புக்கொண்டனர். ’இந்தத் தயாரிப்பைத் தடவிய பிறகு தங்கள் தோல் மென்மையாகவும் பட்டுப் போன்றும் இருப்பதாக’ 92% பங்கேற்பாளர்கள் ஒப்புக்கொண்டனர். ’நாள் முழுவதும் தங்கள் தோல் ஈரப்பதமாக இருக்கிறது’ என 90% பங்கேற்பாளர்கள் ஒப்புக்கொண்டனர் மற்றும் ’நாள் முழுவதும் தங்கள் தோல் மென்மையாகவும் பட்டுப் போன்றும் இருக்கிறது’ என 91% பங்கேற்பாளர்கள் ஒப்புக்கொண்டனர். ’தங்கள் தோல் தொடக்கத்தில் 2 வார காலத்தில் இருந்ததை விடச் சிறப்பானதாக இருக்கிறது’ என 92% பங்கேற்பாளர்கள் ஒப்புக்கொண்டனர். மொத்தத்தில்: ’இதற்கு முன் தாங்கள் பயன்படுத்தியுள்ள எந்த ஈரப்பதமூட்டியையும் விட இந்தத் தயாரிப்பு சிறப்பானதாக உள்ளது’ என 73% பங்கேற்பாளர்கள் ஒப்புக்கொண்டனர்.


கூருணர்வுத் தோல் பரிசோதனை

பரிசோதனை மையம் காம்ப்லைஃப் இத்தாலியா S.r.l, இத்தாலி நோக்கம் Bio‑Oil® Body Lotion தோல் எரிச்சலை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறை மதிப்பிடுதல். மாதிரி ஆய்வுக்குட்படுநர்கள்: 25 பங்கேற்பாளர்கள்; 3 ஆண்கள் மற்றும் 22 பெண்கள், அனைவரும் லாக்டிக் அமில உணர்திறன் சோதனையின்படி கூருணர்வுத் தோலைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டவர்கள். பங்கேற்பாளர்களின் வயது: 18–70. முறையியல் கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வு. இரண்டு பகுதிகள் மதிப்பீடு செய்யப்பட்டன: எதிர்மறைக் கட்டுப்பாடு (கனிமமற்ற நீர்) தடவப்பட்ட பகுதி மற்றும் Bio‑Oil® Body Lotion தடவப்பட்ட பகுதி. சோதனைத் தயாரிப்புகள் Finn Chamber®-ஐப் பயன்படுத்தி 48 மணிநேர காலத்திற்கு தோலின் மேற்பரப்பை ஒட்டியுள்ள பங்கேற்பாளர்களின் பின்பகுதியில் தடவப்பட்டன. பேட்ச் அகற்றப்பட்ட 15 நிமிடங்கள், 1 மணி மற்றும் 24 மணிநேரத்திற்குப் பிறகு முதன்மை தோல் எரிச்சலை மதிப்பீடு செய்ய, ஒரு தோல் மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் தோல் எதிர்வினைகள் மதிப்பீடு செய்யப்பட்டன. தோல் எதிர்வினைகள் 0-4 வரையுள்ள அளவுகோலைப் பயன்படுத்தி மதிப்பிடப்பட்டன (0 என்பது எரிதிமா, நீர்வீக்கம் அல்லது பிற வகை தோல் எரிச்சல்கள் இல்லை என்பதையும், 4 என்பது கடுமையான எரிதிமா மற்றும் நீர்வீக்கத்துடன், தடவிய பகுதியையும் தாண்டி அடர் சிவப்பு நிறத் தோற்றம் மற்றும் விரிவடைந்த வீக்கம் இருக்கின்றது என்பதையும் குறிக்கிறது. முடிவு Bio‑Oil® Body Lotion-இன் தோலின் பொறுத்துக்கொள்ளும் தன்மை ‘எரிச்சல் இல்லாதது’ எனக் குறிப்பிடப்பட்டது.


காமெடோஜெனிக் சாராத பரிசோதனை

பரிசோதனை மையம் காம்ப்லைஃப் இத்தாலியா S.r.l, இத்தாலி நோக்கம் Bio‑Oil® Body Lotion-இன் காமெடோஜெனிக் சாத்தியக்கூறை மதிப்பிடுதல். மாதிரி ஆய்வுக்குட்படுநர்கள்: 20 பங்கேற்பாளர்கள்; பல்வேறு இனங்களைச் சேர்ந்த, முகப்பருவால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ள 14 பெண்கள் மற்றும் 6 ஆண்கள். பங்கேற்பாளர்களின் வயது: 18–65. முறையியல் கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வு. இந்தத் தயாரிப்பு பங்கேற்பாளர்களின் முதுகின் மேல்பகுதியில் ஒரு வடிதாள் தட்டின் மீது தடவப்பட்டது. பேட்ச்கள் 48 முதல் 72 மணிநேரம் வரை அந்த இடத்திலேயே விடப்பட்டன, அதன் பின் அவை அகற்றப்பட்டு மீண்டும் தடவப்பட்டது. தொடர்ந்து 4 வாரங்களுக்கு மொத்தமாக 12 பேட்ச்கள் தடவப்பட்டன. எதிர்மறைக் கட்டுப்பாடு (கனிமமற்ற நீர்), சோதனைத் தயாரிப்பு (Bio‑Oil® Body Lotion) மற்றும் நேர்மறைக் கட்டுப்பாடு (அறியப்பட்ட காமெடோஜெனிக் தயாரிப்பாகிய லானோலின் ஆல்கஹால்) ஆகியவற்றை ஒப்பிடுவதன் மூலம் மூன்று பகுதிகள் மதிப்பிடப்பட்டன. ஒவ்வொரு தயாரிப்பைத் தடவுவதற்கு முன்னரும் தடவிய பின்னரும் காமெடோன்கள் காணப்படுவதை ஒப்பிடுவதற்காக ஒவ்வொரு பேட்ச்சையும் அகற்றிய 15 நிமிடங்களுக்குப் பிறகு தோல் மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் தோல் எதிர்வினைகள் மருத்துவ ரீதியாக மதிப்பிடப்பட்டன. முடிவு Bio‑Oil® Body Lotion காமெடோஜெனிக் இல்லாதது எனக் கண்டறியப்பட்டது. Bio‑Oil® Body Lotion தடவப்பட்ட பகுதி எதிர்மறைக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கணிசமான வித்தியாசம் எதையும் காண்பிக்கவில்லை. நேர்மறைக் கட்டுப்பாடு முகப்பருவைத் தூண்டியது.


பாகுமை ஆய்வு

பரிசோதனை மையம் Union Swiss, தென் ஆப்பிரிக்கா. நோக்கம் Bio‑Oil® Body Lotion-ஐ அதனை ஒத்த ஈரப்பதமூட்டும் தயாரிப்புகளுடன் ஒப்பிடும்போது அதன் மாறும் பாகுமையை மதிப்பிடுகின்ற ஓர் உள் ஆய்வு. மாதிரி உறுதிசெய்யப்பட்ட ஈரப்பதமாக்குதல் வரலாற்றைக் கொண்ட 10 உலகளாவிய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட 13 ஈரப்பதமூட்டுதல் தயாரிப்புகளுடன் Bio‑Oil® Body Lotion-ஐ ஒப்பிடுதல். முறையியல் மாறும் பாகுமை Anton Paar RheoLab QC ரியோமீட்டரைப்பயன்படுத்தி, சுழற்தண்டு CC 39, வேகம்: 20˚C-இல் 200 rpm, சறுக்கு வேகவிகிதம் : 155 உபயோகித்து படிக்கப்பட்டது. முடிவு போட்டித் தயாரிப்புகளின் சராசரியை விட (முறையே 94 mPa.s vs. 707 mPa.s) Bio‑Oil® Body Lotion 7.5 மடங்கு குறைவான மாறும் பாகுமையைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது, இது மிக எளிதாகவும் விரைவாகவும் உறிஞ்சப்படுகின்ற அடர்த்தி குறைந்த, இலேசான திரவம் என்பதைக் குறிக்கிறது.


பயன்பாடு

எவ்வாறு தடவுவது Bio‑Oil® Body Lotion முழுமையாக உறிஞ்சப்படும் வரை உடலின் மீது வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யப்பட வேண்டும். Bio‑Oil® Body Lotion காலை மற்றும் மாலை என தினமும் இரு முறை தடவ வேண்டும் எனப் பரிந்துரைக்கப்படுகின்றது. Bio‑Oil® Body Lotion திறந்த காயம் அல்லது உடைந்த தோல் மீது தடவக் கூடாது. இது புறமருந்து ஒப்பனைப் பூச்சாகப் பயன்படுத்துவதற்காக மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. உபயோகிப்பதற்கு முன் நன்கு குலுக்கவும் Bio‑Oil® Body Lotion ஆனது தண்ணீரும் எண்ணெயும் மிக இலேசாக ஒன்றாய் கட்டுண்டுள்ள ஒரு பசைக்குழம்பு ஆகும். ஆடாமல் வைத்திருக்கும்போது, அவற்றில் சில எண்ணெய்கள் மிக இலேசாக தயாரிப்பின் மேற்பரப்பிற்கு வந்து ஒரு மெல்லிய அடுக்கை உருவாக்குகின்றன. பயன்படுத்துவதற்கு முன் தயாரிப்பை மென்மையாகக் குலுக்குவதன் மூலம், எண்ணெய் அடுக்கு மீண்டும் லோஷனுக்குள் பரவுகிறது. அடுக்கு உருவாவது மூன்று நாள்கள் முதல் மூன்று வாரங்கள் வரை எந்த நேரத்திலும் நடக்கலாம் மற்றும் இது வெப்பநிலை, பாட்டில் எவ்வளவு வேகமுடனும் எவ்வளவு கால இடைவெளியிலும் குலுக்கப்படுகின்றது போன்ற காரணிகளைச் சார்ந்துள்ளது. எண்ணெய் அடுக்கு உருவாகாமல் இருப்பதைத் தடுக்க தயாரிப்பைத் தினமும் பயன்படுத்துவது, மருந்தை உபயோகிக்கும்போது பாட்டிலைத் தலைகீழாகத் திருப்புவது போன்றவற்றைச் செய்தாலே போதுமானது. எண்ணெய் அடுக்கு உருவாகியிருந்து தயாரிப்பு குலுக்காமல் உபயோகப்படுத்தப்பட்டிருந்தால், பாட்டிலில் இருந்து தெளிவான எண்ணெய்க் கலவை வெளியே வரலாம். இது நுகர்வோர் பாதுகாப்பு அபாயம் அல்ல. எவ்வளவு காலம் பயன்படுத்த வேண்டும் Bio‑Oil® Body Lotion-இன் மருத்துவப் பரிசோதனை நான்கு வார காலமாக நடைபெற்று வருகின்றது, இது காலப்போக்கில் தயாரிப்பின் செயல்திறனை மதிப்பிட உதவுகிறது. குறைந்தது 24 மணிநேரத்திற்குப் பிறகு தோலின் தோற்றத்தில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த முன்னேற்றம் பரிசோதனைக் காலம் முழுவதும் பராமரிக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளியியல் பகுப்பாய்வு மூலம் தெரியவந்துள்ளது. ஆனாலும் Bio‑Oil® Body Lotion அதன் ஈரப்பதமூட்டுதல் மற்றும் தோலுக்கு ஊட்டமளிக்கும் பண்புகளுக்காக, அன்றாட தோல் பராமரிப்பு வழக்கத்தின் ஒரு பகுதியாக ஆக்குவதன் மூலம் அதைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். தோல் பராமரிப்பு வழக்கத்துடன் இணைத்துப் பயன்படுத்தவும் அதிகபட்ச உறிஞ்சுதலுக்கு, ஷவர் குளியல் அல்லது சாதாரண குளியலுக்குப் பிறகு சுத்தமான தோலின் மீது Bio‑Oil® Body Lotion தடவப்பட வேண்டும். சூரிய ஒளிப் பாதுகாப்பு லோஷன் அல்லது வேறு கிரீம் தடவுவதாக இருந்தால் Bio‑Oil® Body Lotion முற்றிலும் தோலுக்குள் உறிஞ்சப்பட்ட பிறகு மட்டுமே தடவவும். கர்ப்பத்தின்போது பயன்படுத்துதல் Bio‑Oil® Body Lotion கர்ப்பத்தின்போது பயன்படுத்தப் பாதுகாப்பானது. வைட்டமின் A மற்றும் கர்ப்பம் பெண்கள் வழக்கமாக கர்ப்ப காலத்தில் வைட்டமின் A நிறைந்த ஊட்டச்சத்து துணைப்பொருள்களைக் குறைத்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. எனவே வைட்டமின் A கொண்ட தோல் பராமரிப்புத் தயாரிப்புகளைப் பயன்படுத்துவது குறித்த பிரச்சனைகள் அவர்களுக்கு இருக்கலாம். தோலின் மீது தடவப்படும் எந்தவொரு பொருளும் அதன் நச்சுத்தன்மை வரம்பை விட அதிக அளவுகளில் காணப்பட்டால் மட்டுமே அது தீங்கு விளைவிக்கக் கூடியதாகும். தோலானது ஊடுருவலுக்கு கணிசமான தடுப்பு அரணாக விளங்குவதால், மேற்பரப்பில் தடவப்படும் வைட்டமின் A-இன் சிறு பகுதி மட்டுமே உடலுக்குள் நுழைகிறது. நுகர்வோர் பாதுகாப்புக்கான ஐரோப்பிய ஆணையத்தின் அறிவியல் குழு (Scientific Committee on Consumer Safety, SCCS) ஒப்பனை பகுதிப்பொருள்களாகப் பயன்படுத்தப்படுகின்ற வைட்டமின் A மற்றும் அதன் எஸ்டர்களை மதிப்பீடு செய்துள்ளது. வைட்டமின் A பாடி லோஷன்களில் பயன்படுத்தப்படும்போது ரெட்டினோலுக்கு இணையான பொருள்களின் அதிகபட்ச செறிவு 0.05% ஆக இருக்கும் வரை அது பாதுகாப்பானது என SCCS கருத்துத் தெரிவித்துள்ளது. Bio‑Oil® Body Lotion உருவாக்கத்தில் காணப்படுகின்ற வைட்டமின் A பாடி லோஷனுக்கு அதிகபட்சமாக அனுமதிக்கத்தக்க செறிவை விட மிகக் குறைவாக இருப்பதால் கர்ப்பகாலம் முழுவதும் இதைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த முடியும். தாய்ப்பால் கொடுக்கும்போது பயன்படுத்துதல் Bio‑Oil® Body Lotion தாய்ப்பால் கொடுக்கும்போது பயன்படுத்துவது பாதுகாப்பானது, ஆனால் முலைக்காம்புகளில் அதைத் தடவுவதைத் தவிர்க்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தீங்குதரும் விளைவுகள் ஏற்படுவதற்கான சாத்தியகூறுகள் இல்லை என்றாலும் கூட, பச்சிளம் குழந்தைகள் மிகுந்த உணர்திறன் கொண்டவர்கள் என்பதால் அவர்கள் மிகச் சிறிய அளவுகளில் கூட Bio‑Oil® Body Lotion-ஐ விழுங்கிவிடக் கூடாது. மழலைகள் மற்றும் குழந்தைகளிடம் பயன்படுத்துதல் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மீது Bio‑Oil® Body Lotion பயன்படுத்துவதன் பாதுகாப்பு மதிப்பிடப்படவில்லை. பிறந்த முதல் சில வருடங்களில், மனித உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வளர்ச்சி உள்ளிட்ட பல மாற்றங்கள் நடைபெறுகின்றன. எனவே இது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகளிடம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது. சூரிய ஒளியில் பயன்படுத்துதல் Bio‑Oil® Body Lotion மீது நடத்தப்பட்ட பரிசோதனைகள் இது வேனிற்கட்டியை தீவிரமடையவோ அல்லது அதிகரிக்கவோ செய்வதில்லை எனக் காண்பித்துள்ளன. எனவே சூரிய ஒளியில் இதைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது, ஆனாலும் இந்தத் தயாரிப்பு சூரியனின் UVA மற்றும் UVB கதிர்களின் தீங்குதரும் விளைவுகளுக்கு எதிராக எந்தப் பாதுகாப்பும் அளிப்பதில்லை என்பதால் இந்தத் தயாரிப்பை குறைந்தபட்சம் 30 சூரிய ஒளிப் பாதுகாப்புக் காரணி (Sun Protection Factor, SPF) கொண்ட பரந்த நிறமாலை சன்ஸ்க்ரீன் உடன் சேர்த்துப் பயன்படுத்த வேண்டியது முக்கியமாகும். சளி சவ்வுகள் மீது அல்லது அவற்றுக்கு அருகில் பயன்படுத்துதல் Bio‑Oil® Body Lotion அனைத்துப் பயன்பாடுகளுக்கும் பாதுகாப்பானது என வகைப்படுத்தப்பட்டுள்ளது, ஆனாலும் சளி சவ்வுகள் மீது இந்தத் தயாரிப்பைப் பயன்படுத்துவது நியாயமாக ஊகித்தறியக்கூடிய பயன்பாடு அல்ல என்பதால் அவற்றில் படுமாறு அதைப் பயன்படுத்துவது குறித்த பாதுகாப்பு பரிசோதிக்கப்படவில்லை. கதிரியக்கச் சிகிச்சை அல்லது வேதிச் சிகிச்சையுடன் இணைத்துப் பயன்படுத்துதல் Bio‑Oil® Body Lotion கதிரியக்கத்தை உறிஞ்சக்கூடிய பகுதிப்பொருள்கள் எதையும் கொண்டிருக்கவில்லை என்றாலும், கதிரியக்கச் சிகிச்சை அல்லது வேதிச் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நபர்கள் தயாரிப்பைப் பயன்படுத்துவதற்கு முன் மருத்துவ நிபுணரின் ஆலோசனையைப் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மருந்துத் தயாரிப்புகளுடன் இணைத்துப் பயன்படுத்துதல் Bio‑Oil® Body Lotion ஓர் ஒப்பனைத் தயாரிப்பு ஆகும். மருந்துத் தயாரிப்புகள் எடுத்துக்கொள்ளும்போது அவற்றுடன் சேர்த்து இந்தத் தயாரிப்பையும் பயன்படுத்துவது தொடர்பான ஆலோசனைக்கு, மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது. கூருணர்வுத் தோல் மீது பயன்படுத்துதல் Bio‑Oil® Body Lotion-ஐ கூருணர்வுத் தோல் மீது பயன்படுத்தலாம். கூருணர்வுத் தோலைக் கொண்ட, 18-70 வயதுடைய 25 பங்கேற்பாளர்களிடம் நடத்தப்பட்ட தோல் எரிச்சல் குறித்த ஆய்வில், எந்த ஆய்வுக்குட்படுநர்களும் இந்த உருவாக்கத்துக்குப் பாதக எதிர்வினைகள் எதையும் அனுபவிக்கவில்லை. எண்ணெய்ப் பசையுள்ள தோல் மீது பயன்படுத்துதல் Bio‑Oil® Body Lotion எண்ணெய்ப் பசையுள்ள தோல் மீது பயன்படுத்தலாம். முகப்பரு வருவதற்கு வாய்ப்புள்ள தோலைக் கொண்ட, 18-65 வயதுடைய 20 பங்கேற்பாளர்களிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், Bio‑Oil® Body Lotion காமெடோஜெனிக் இல்லாதது எனக் கண்டறியப்பட்டது. முகப்பருவால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ள தோல் மீது பயன்படுத்துதல் Bio‑Oil® Body Lotion முகப்பருவால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ள தோல் மீது பயன்படுத்தலாம். முகப்பருவால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ள தோலைக் கொண்ட, 18-65 வயதுடைய 20 பங்கேற்பாளர்களிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், Bio‑Oil® Body Lotion காமெடோஜெனிக் இல்லாதது எனக் கண்டறியப்பட்டது. முகப்பருவால் பாதிக்கப்பட்ட நபர்கள் Bio‑Oil® Body Lotion பயன்படுத்துவதற்கு முன் மருத்துவ நிபுணரின் ஆலோசனையைப் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது.


வறண்ட தோல் அறிகுறிகள் மற்றும் காரணங்கள்

அறிகுறிகள் பொலிவற்ற மற்றும் செதில்போன்ற தோல், நுண்ணிய கோடுகள், கிரே அல்லது சாம்பல் நிறத் தோல் மற்றும் சொரசொரப்பான மற்றும் இறுக்கமான உணர்வு ஆகியவை வறண்ட தோல் அறிகுறிகள் ஆகும். காரணங்கள் வறண்ட தோல் புற மற்றும் அகக் காரணிகளால் ஏற்படுகின்றது. புறக் காரணிகள்: வறண்ட வானிலை தோலின் உள்பகுதியில் இருந்து ஈரப்பதத்தை லிப்பிட் ஈரடுக்கு வாயிலாக வறண்ட வெளிப்புறக் காற்றுக்குள் உறிஞ்சி எடுத்துவிடுகிறது. ஏர் கண்டிஷன்கள் மற்றும் ஹீட்டர்கள் காற்றிலுள்ள ஈரப்பதத்தை எடுத்துக்கொள்கின்றன, அதன் காரணமாக அவை செயற்கையான வறண்ட வானிலையை உருவாக்கி தோலில் இருந்து ஈரப்பதத்தை எடுத்துவிடுகின்றன. தினமும் துணி துவைத்தல் மற்றும் கடுமையான டிடர்ஜென்ட்களின் பாதிப்புக்கு உள்ளாதல் ஆகியவற்றின் காரணமாக லிப்பிட் ஈரடுக்கு உரித்து எடுக்கப்படுவதால், தோலில் உள்ள ஈரப்பதம் எளிதாக வெளியேறுகின்றது. அகக் காரணிகள்: உடல் முதுமையடையும்போது, தோல் சில லிப்பிடுகளை உற்பத்தி செய்வதால் லிப்பிட் ஈரடுக்கு மெலிந்து ஈரப்பதம் வெளியேறுவதை எளிதாக்குகிறது. லிப்பிட் ஈரடுக்கில் இயற்கையாகவே செரமைடுகளின் அளவு குறைவதன் காரணமாக வறண்ட தோல் உருவாவதில் மரபியல் ஒரு பங்கு வகிக்கலாம். இதனால் தோல் தடுப்பின் திறப்படைப்பு குறைந்து, ஈரப்பத இழப்பு இயல்பான அளவுகளை விட அதிகரிக்கிறது. தோலின் pH தடுப்புச் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தோலில் அதிகமான pH அளவு காணப்படுவது லிப்பிட் ஈரடுக்கின் ஆரோக்கியமான செயல்பாட்டைப் பாதிக்கிறது.


தயாரிப்பு

Bio‑Oil® Body Lotion தயாரிப்பு ஒப்பனைப் பொருள்களுக்கான ISO 22716:2007-இன் சிறந்த தயாரிப்பு நடைமுறை (Good Manufacturing Practice, GMP) நிபந்தனைகளை உறுதிப்படுத்துகிறது. Bio‑Oil® Body Lotion தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்ற அனைத்து மூலப் பொருள்களும் பகுப்பாய்வுச் சான்றிதழ் (Certificate of Analysis, COA) உடன் வருகின்றன மற்றும் அனைத்து பொதியிடுதல் பொருள்களும் உறுதிப்படுத்தும் சான்றிதழ் (Certificate of Conformance, COC) உடன் வருகின்றன. தரக் கட்டுப்பாட்டுப் பரிசோதனைகளில் ஒப்புதல் பெறப்படும் வரை மூலப் பொருள்கள் அல்லது பொதியிடுதல் பொருள்கள் எதுவும் தயாரிப்புக்கு விடுவிக்கப்படுவதில்லை. கலக்கப்பட்ட ஒவ்வொரு Bio‑Oil® Body Lotion பேட்ச்சுக்கும் ஒரு பிரத்தியேக பேட்ச் எண் வழங்கப்படுகின்றது. பேட்ச்சில் இருந்து ஒரு மாதிரி எடுக்கப்பட்டு, அதன் தோற்றம், தெளிவு, வாசனை, ஸ்பெக்ட்ரோஃபோட்டோமெட்ரியால் அடையாளம் கண்டறிதல், அடர்த்தி, பாகுமை மற்றும் நுண்ணியிரியல் ஆகியவற்றிற்காக ஆய்வகத்தில் பரிசோதிக்கப்படுகின்றது. மாதிரி நான்கு வருடங்களுக்கு சேமித்து வைக்கப்படுகின்றது. Bio‑Oil® Body Lotion நிரப்புதலும் பொதியிடுதலும் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு நிலையத்தில் மேற்கொள்ளப்படுகின்றது. தூசி மூலமான மாசுபாடு ஏற்படுவதைத் தடுக்க காற்றானது அதிக திறன் கொண்ட துகள் காற்று (High Efficiency Particulate Air, HEPA) வடிகட்டும் அமைப்பு வழியாகச் செலுத்தப்படுகின்றது. உற்பத்திப் பிரிவுகளில் பணிபுரியும் பணியாளர்கள் தொப்பி, முகக் கவசங்கள், முக மறைப்புகள், கையுறைகள் மற்றும் ஷூ கவர்கள் போன்றவற்றை அணிகின்றனர். அசாதாரணக் குறைபாடுகளுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப் பிரிவுகளில் இருந்து வழக்கமான இடைவெளிகளில் மாதிரிகள் எடுக்கப்பட்டு தரக் கட்டுப்பாட்டுத் துறையால் ஆய்வு செய்யப்படுகின்றன. பாட்டில், அட்டைப்பெட்டி மற்றும் ஷிப்பர் மீது பேட்ச் எண் அச்சிடப்படுகின்றது மற்றும் தயாரிக்கப்பட்ட ஒவ்வொரு பேட்ச்சில் இருந்தும் தக்கவைப்பு மாதிரி எடுக்கப்பட்டு நான்கு வருடங்களுக்குப் பாதுகாத்து வைக்கப்படுகின்றது. Bio‑Oil® Body Lotion தயாரிப்பில் தீங்கு விளைவிக்கின்ற மாசு உமிழ்வுகள், அபாயகரமான கழிவு அல்லது கழிவு நீர் எதுவும் உருவாக்கப்படுவதில்லை.


சேமித்து வைப்பதற்கான அறிவுறுத்தல்கள்

Bio‑Oil® Body Lotion குளிர்ச்சியான இடத்தில், நேரடி சூரிய ஒளி படாமல் வைக்கப்பட வேண்டும்.


மறுசுழற்சி செய்தல்

அனைத்து Bio‑Oil® Body Lotion பொதியிடுதல் பொருள்களும் (பாட்டில், மூடி மற்றும் அட்டைப்பெட்டி) மறுசுழற்சி செய்யக்கூடியவை ஆகும்.


திறந்த பின் பயன்பாட்டுக் காலம் (PERIOD AFTER OPENING, PAO)

Bio‑Oil® Body Lotion 12 மாத PAO-ஐக் கொண்டுள்ளது. திறந்த பிறகு இந்தக் காலத்திற்குள் இத்தயாரிப்பைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது மற்றும் நுகர்வோருக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் பயன்படுத்த முடியும்.


சான்றளிப்புகள்

Bio‑Oil® Body Lotion ஹலால் மற்றும் கோஷர் சான்றிதழ் பெற்றுள்ளது.


பாதக எதிர்வினைகள்

அனைத்து ஒப்பனைத் தயாரிப்புகளைப் போன்றே Bio‑Oil® Body Lotion பாதுகாப்பான நச்சுயியல் விவரக்குறிப்பு கொண்டுள்ளது மற்றும் இது தொடர்பான சர்வதேச விதிமுறைகளைப் பூர்த்தி செய்கிறது என்றாலும், Bio‑Oil® Body Lotion பயனர்கள் தயாரிப்பைப் பயன்படுத்தும்போது பாதக எதிர்வினையை எதிர்கொள்ளக்கூடும். ஏதேனும் ஒரு பாதக எதிர்வினை ஏற்பட்டால், தயாரிப்பைப் பயன்படுத்துவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பாதக தோல் எதிர்வினை அறிகுறிகள் தோல் தடிப்பு, வீக்கம் மற்றும் அழற்சி ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கலாம், இது பொதுவாக தயாரிப்பு தடவப்பட்ட பகுதியில் ஏற்படும். இந்த எதிர்வினைகளுடன் சேர்த்து அரிப்பு மற்றும் சிறிதளவு அசௌகரியம் ஆகியவையும் இருக்கலாம். பெரும்பாலான நிகழ்வுகளில், பாதக எதிர்வினைகள் தயாரிப்பு பயன்படுத்துவதை நிறுத்திய பிறகு இரண்டு முதல் மூன்று நாள்களுக்குள் மறைந்துவிடும். தோல் தனது அசல் நிலைக்குத் திரும்பும் வரை, எதிர்வினை படிப்படியாகத் தணிந்து வரும் என்பதால் தோல் வறண்டும் செதில் போன்றும் காணப்படலாம். Bio‑Oil® Body Lotion தடவுவதனால் ஏற்படுவதற்குச் சாத்தியமுள்ள ஒவ்வாமை எதிர்வினை தொடர்பாக ஏதேனும் கவலை இருந்தால், இதைப் பரிசோதிக்க ஓர் எளிமையான ஒவ்வாமைப் பரிசோதனை செய்துகொள்வது நலம். இதைச் செய்ய சிறிதளவு Bio‑Oil® Body Lotion-ஐ எடுத்து முன்கையின் உட்புறத்தில் தடவி, 24 மணிநேரத்தில் ஏதேனும் எதிர்வினை ஏற்படுகின்றதா எனக் காத்திருந்து பார்க்க வேண்டும். உணரக்கூடிய தோல் சிவத்தல் (எரிதிமா) அல்லது தோலில் இலேசான வீக்கம் (நீர்வீக்கம்) போன்றவை காணப்படுவது ஒவ்வாமை எதிர்வினையின் அறிகுறியாக இருக்கலாம்.


விலங்குகளில் பரிசோதிக்கப்படவில்லை

Bio‑Oil® Body Lotion மற்றும் அங்கமாக உள்ள மூலப்பொருள்கள் ஒப்பனை நோக்கங்களுக்கான விலங்கு பரிசோதனை தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்குமுறை விதிகளைப் பின்பற்றித் தயாரிக்கப்பட்டுள்ளன. Bio‑Oil® Body Lotion அல்லது அதன் பகுதிப் பொருள்கள் எதுவும், Bio‑Oil அல்லது அதன் மூலப்பொருள் விநியோகிப்பாளர்கள் எவராலும் விலங்குகளின் மீது பரிசோதிக்கப்படவில்லை.


சுத்தமான தாவரப்பொருள்

Bio‑Oil® Body Lotion விலங்குகளிடமிருந்து பெறப்பட்ட பகுதிப்பொருள்கள் எதையும் கொண்டிருக்கவில்லை.


எதிர்பாராமல் விழுங்குதல்

Bio‑Oil® Body Lotion நச்சுத்தன்மை அற்றது என்பதால் Bio‑Oil® Body Lotion எதிர்பாராமல் விழுங்கப்படும் பட்சத்தில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உணர்வுகளுக்கு அப்பால் வேறு எந்தப் பாதக விளைவுகளும் ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை. ஆனாலும், குறிப்பாக பச்சிளம் பிள்ளை அல்லது குழந்தையால் எதிர்பாராமல் விழுங்குதல் நிகழ்ந்தால், மருத்துவ ஆலோசனை பெறுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.


தோற்றத்தில் மாற்றம்

Bio‑Oil® Body Lotion காலெண்டுலா சாறு மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் வைட்டமின் A பால்மிடேட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இவை அனைத்துமே ஒளி உணர்திறன் கொண்டவை ஆகும். சூரிய ஒளி படுமாறு வைத்திருப்பது காலப்போக்கில் நிறமாற்றத்தை ஏற்படுத்தலாம். Bio‑Oil® Body Lotion நேரடி சூரிய ஒளி படாத இடத்தில் சேமித்து வைக்கப்பட வேண்டும்.


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்ட தேதி

22 ஆகஸ்ட் 2023